சினிமா

ஏழை மக்களுக்காக காய்கறி வித்த நடிகை சமந்தா! அலைமோதியா கூட்டம்!

Summary:

Samanthaa worked at vegetable shop

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னை நடிகர்களுடன் நடித்துவிட்டார் நடிகை சமந்தா.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இருக்காது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அதை உடைத்து திருமணத்திற்கு பிறகும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

சிவர்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சீமராஜா திரைப்பதில் சமந்தா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் நடிகை சமந்தா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். அவரை பார்க்கவே கடை பக்கம் நிறைய பேர் வர காய்கறிகளும் சற்று நேரத்தில் விற்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் லட்சுமி மஞ்சு நடத்தி வரும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூலி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அளிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்காக தான் சமந்தா இப்படி காய்கறி மார்க்கெட்டில் விற்றுள்ளார்.


Advertisement