சினிமா

நாக சைதன்யாவின் ஜீவனாம்சத்தை மறுத்த நடிகை சமந்தா! நடந்தது என்ன? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

Summary:

நாக சைதன்யாவின் ஜீவனாம்சத்தை மறுத்த நடிகை சமந்தா! நடந்தது என்ன? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். ஒருகாலத்தில் திருமண வரவேற்பில் வெல்கம் கேர்ளாக பணிபுரிந்து வந்த சமந்தா தற்போது தென்னிந்தியாவிலேயே அனைவரையும் ஈர்க்கும் நடிகையாக கலக்கி வருகிறார். 

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகரான நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இன்னும் சில நாட்களில் அவர்கள் நான்காவது திருமண நாளை கொண்டாடவிருக்கும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா, தானும் நாக சைதன்யாவும் இனிமேல் நண்பர்களாக இருப்போம் என்று அவரை பிரியவிருக்கும் செய்தியை பகிர்ந்தார். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் நாக சைதன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சமாக பணம் கொடுக்க முன் வந்தநிலையில் சமந்தா தனக்கு எந்த பணமும் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும், மேலும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாங்கிய ஹைதராபாத் வீட்டிற்கான நாக சைதன்யாவின் பங்கை கொடுத்துவிட்டு தனக்கு சொந்தமாக்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர் தான் இனி ஹைதராபாத்தில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement