தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு நோ சொன்ன நடிகை சமந்தா! இதுதான் காரணமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் ,தெலுங்கு சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் இருவருக்கும் ஒத்துவராத நிலையில் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையில் பாலிவுட்டில் களமிறங்கிய அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் கேட்கப்பட்டதாம். ஆனால், அப்போது அவர் நடிகர் நாகசைதன்யாவுடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்த நிலையில் படங்களில் நடிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சில சிக்கல்கள் இருந்ததாகவும், அதனால் அவர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.