தனது நோய் குறித்து வெளிப்படையாக கூறியதன் காரணம் என்ன.? நடிகை சமந்தா உருக்கமான விளக்கம்.!

தனது நோய் குறித்து வெளிப்படையாக கூறியதன் காரணம் என்ன.? நடிகை சமந்தா உருக்கமான விளக்கம்.!



Samantha opens up about why she revealed her health issues to public

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து திரையுலகும் கொண்டாடும் நடிகை சமந்தா. இந்தியாவின் பல மொழிகளிலும் நடித்து, முன்னணி கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

அவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது, மயோசிடிஸ் என்று அழைக்கப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பல படங்களுக்காக பெற்றிருந்த அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒரு பிரேக் எடுத்திருந்தார். தற்போது உடல் நலன் தேறி மீண்டும் திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வருகிறார். தன்னுடைய நோயைப் பற்றி வெளிப்படையாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்ததற்கான காரணத்தை தற்போது உருக்கமாக தெரிவித்துள்ளார்.

samantha

அதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் உள்ள ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அதன் ரிலீஸ் சமயத்தில் தசை அழற்சி நோயால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்தப் படத்தின் ப்ரோமோஷனல் பங்கேற்பதற்காக தயாரிப்பாளர் சமந்தாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது ஒரே ஒரு பேட்டி கொடுப்பதற்கு மட்டும் சமந்தா சம்மதித்துள்ளார்.

தசை அழற்சி நோய்க்காக மருந்துகள் உட்கொண்டதால், அவரது உருவத்தில் நிறைய மாற்றங்கள் தென்பட்டதை உணர்ந்த சமந்தா, அந்த நோய் குறித்து ரசிகர்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது பலரும், இரக்கத்தை சம்பாதிப்பதற்காகவே சமந்தா இவ்வாறு கூறுவதாக விமர்சனம் செய்தார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். தற்போது ஒரு நடிகையாக நன்கு வளர்ச்சி அடைந்து விட்டதாகவும் கூறினார். 

samantha

மேலும் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை, தேடித் தேடிப் படித்து அதனை சரி செய்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். அதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது கஷ்டப்படும் சமயங்களில் அதனை வெளிப்படுத்தும் வடிகாலாக சமூக ஊடகங்களை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.