வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய சமந்தா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!?

வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய சமந்தா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!?



samantha-looking-like-angel-at-white-dress-photos-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார் சமந்தா.

samantha

இவ்வாறு திரைத்துறையில் பிஸியான நடிகையாக இருந்து வரும் சமந்தாவிற்கு திடீரென மையோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு திரைத்துறையில் சிறிது நேரம் பிரேக் எடுத்துக் கொண்டார். இதன் பிறகு தொடர்ந்து பல சிகிச்சைகள் செய்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார்.

இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருகென்று ரசிகர் கூட்டம் எப்போதும் அதிகமாகி கொண்டே தான் உள்ளது. அந்த அளவிற்கு சமந்தா தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த சமந்தா மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

samantha

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.