மெல்லினம் இடையினம் தாண்டி 6 பேக்கில் ரசிகர்களை உறைய வைத்த சமந்தா!

மெல்லினம் இடையினம் தாண்டி 6 பேக்கில் ரசிகர்களை உறைய வைத்த சமந்தா!


samantha-flaunts-her-six-pack-abs-in-insta-goes-viral

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததை தொடர்ந்து தனது நடிப்பு கேரியரிலும், உடற்பயிற்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மையோசைட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அந்த நோயிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

samantha

மேலும் இவரது நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. பேமிலி மேன் மற்றும் பார்ஸி வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் & டி .கே இயக்கத்தில் புதிய இணையதள தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவற்றிற்காக தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சமந்தா.

samantha

தனது உடற்பயிற்சி தொடர்பான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் அவர் தனது சிக்ஸ் பேக் கட்டுடலை அந்தப் புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.