சினிமா

குடும்ப பெயரை நீக்கி, நடிகை சமந்தா செய்த காரியத்தை பார்த்தீர்களா! ஏன் இந்த திடீர் மாற்றம்!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்ப

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நடிகை சமந்தா. மேலும் இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகை சமந்தாவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்தும் மார்க்கெட் குறையாமல் சமந்தா ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் திருமணத்துக்குப் பின்னர் தனது சமூகவலைதளப் பக்கங்களில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்துகொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார். ஆனால் அவர் தற்போது அக்கினேனி என்பதை நீக்கிவிட்டு S என்ற எழுத்தை மட்டும் வைத்துள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.


Advertisement