சமந்தாவுக்கு கிடைத்தது திரிஷாவுக்கு கிடைக்காம போச்சே! என்ன காரணமா இருக்கும்?
தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக பேசப்படுபவர் நடிகை நயன்தாரா. தனி ஒரு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பெரும் புகழும் பெற்றவர் நடிகை நயன்தாரா. தற்போது அவரது அளவிற்கு வளைந்து வருகிறார் நடிகை சமந்தா. ஆனால் நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை த்ரிஷா.
நயன்தாரா, த்ரிஷா இருவரும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தான் திரையுலகத்தில் நாயகியாக அறிமுகமானார்கள். ஆனால் நயன்தாராவின் புகழ் உச்சத்தில் உள்ளது. அவர் தனி நாயகியாக நடித்த அணைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால் த்ரிஷாவால் தனி நடிகையாக வெற்றிபெற முடியவில்லை. தனி நடிகையாக அவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியில்தான் முடிந்தது.

தற்போது நடிகை நயன்தாரா வழியை பின்பற்றுகிறார் நடிகை சமந்தா. தற்போது நடிகை சமந்தா நடித்து வெளியான யு டர்ன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் தனி ஒரு நடிகையாக நடிகை சமந்தா வெற்றிபெற்றுள்ளார். ஆனால் சமந்தாவுக்கு சீனியரான த்ரிஷாவால் அதை பெற முடியவில்லை.
