
சமந்தாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்... அப்போ செம்ம மாஸ் தான்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனையடுத்து விஜய், சூர்யா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹூட் படங்களை கொடுத்துள்ளார்.
இவருக்கு தமிழ், தெலுங்கு தவிர தற்போது பாலிவுட்டிலும் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் வெப் தொடர் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் சமந்தா ஃபேமிலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்தது நாக சைதன்யா பிடிக்காத காரணத்தால் தான் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புதிய வெப் தொடர் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஃபேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீ கே இயக்கத்தில் உருவாகவுள்ள வெப் தொடரில் சமந்தா நடிக்கவுள்ளார்.
இத்தொடரின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் துவங்கியுள்ளதை அடுத்து சமந்தாவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement