முதல்வரை சந்திக்க சென்ற சாக்ஷி! அவரோட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

முதல்வரை சந்திக்க சென்ற சாக்ஷி! அவரோட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!



sakshi-with-famous-actors-went-to-meet-cheifminister

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக கலந்து கொண்டவர் சாக்ஷி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர். 

சென்னை பெண்ணான சாக்ஷி தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

Sakshi

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கவினுடன்  ஏற்பட்ட காதல் மூலம் பல விமர்சனங்களை சந்தித்தார். மேலும்  அவரது பேச்சு, அவர் பிறரை குறித்து குறை கூறுவது என பல விஷயங்களால் மக்களால் வெறுக்கப்பட்டு வந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னரும் அவர் பல போட்டியாளர்கள் குறித்து விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் சாக்ஷி சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சினிமா இன்டர்னேஷனல் பிலிம்-க்காக காசோலை வாங்க  பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் மோகன், நடிகர் மனோபாலா போன்ற பல முன்னணி பிரபலங்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களுடன் வைரலாகி வருகிறது.