மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
படமாகிறது படையப்பா நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை! கதாநாயகியாக நடிக்கப்போவது இவரா? தீயாய் பரவும் தகவல்!
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல், சத்யராஜ். அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சௌந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்காக, பிரசாரம் செய்ய சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது அந்த மரணம் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபகாலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக தயாராகிவரும் நிலையில், தற்போது நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கையும் படமாகவுள்ளது. இதில் சௌந்தர்யாவாக நடிக்க நடிகை சாய் பல்லவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.