புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"2 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இந்த விஷயம் பண்ணுவது சந்தோசமாக இருக்கிறது" மகிழ்ச்சியை பகிர்ந்த சாய் பல்லவி.!
மலையாளத்தில் 2015 ஆம் வருடம் நிவின்பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா சபாஷ்டியன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரேமம். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
மேலும் இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. பிரேமம் படத்திற்கு பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமாக்களில் சாய்பல்லவிக்கு மார்க்கெட் எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் சாய்பல்லவி தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாய்பல்லவி.
இது குறித்து சாய்பல்லவி கூறியதாவது, "இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாசிட்டிவாக இருப்பதை உணர்கிறேன்" என்று மிகவும் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். நாக சைதன்யாவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.