சினிமா

எனது பிளேலிஸ்டில் எப்போதுமே உங்களது அந்த பாடல் இருக்கும்! எஸ்.பி.பி மறைவிற்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!

Summary:

Sachin condolences to spb

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இந்த மரணம் பலரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் எஸ்பிபி மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக  இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் எனக்கு எப்போதுமே எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்களின் பாடல்களைக் கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும். அவரது மறைவிற்கு  ஆழ்ந்த இரங்கல்கள்.

எனது பிளேலிஸ்டில் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்த சாகர் திரைப்படத்தில் அவர் பாடிய சச் மேரே யார் ஹை என்ற  பாடலை வைத்திருப்பேன். அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.


Advertisement