நடிகை ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் வழங்கிய உயரிய பதவி - மாதம் இத்தனை லட்சம் சம்பளமா! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் சினிமா

நடிகை ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் வழங்கிய உயரிய பதவி - மாதம் இத்தனை லட்சம் சம்பளமா!

1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.

அதன் பிறகு இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விடுத்து தீவிர அரசியலில் களமிறங்கினார். அதன்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

இந்நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழில் துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வழங்கினார். அவை அமைச்சருக்கு நிகரான பதவியாகும். அதுமட்டுமின்றி மாதம் செலவு உட்பட அனைத்தையும் சோர்த்து 3.82 லட்சம் சம்பளம் பெறுகிறார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo