அடேங்கப்பா! 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

அடேங்கப்பா! 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முதல் படமே மாபெரும் வெற்றிப்படம் என்பதால் இவருக்கு அதிகப்படியான பெண் ரசிகர்கள் உருவானார்கள். அதை தொடர்ந்து மின்னலே திரைப்படம் மூலம் அனைத்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் மாதவன்.

இந்தநிலையில் நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதற்காக அவரைப் போலவே முகத்தில் நீண்ட தாடியுடன் நடித்து வந்தார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார் சாக்கலேட் பாய் மாதவன். கடந்த ஒரு வருடமாக இந்தப்பட வேலையில் அவர் மூழ்கியுள்ளார். 

நடிகை சிம்ரன் மாதவன் அறிமுகமான காலத்தில் முன்னனி ஹீரோயினாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர். வெகு காலம் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். மாதவன், சிம்ரன் இணைந்து பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்துள்ளார்கள். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற படம். அதில் மாதவன் சிம்ரன் ஜோடியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக விளங்கியவர்கள் 17 வருடங்களுக்குப்பின் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மாதவன் சிம்ரன் இணைந்திருக்கும் படத்தை ரசிகரகள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். அதனால அப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo