ஹோம் டூர் வீடியோவால் சிக்கலில் மாட்டிய ரோபோ சங்கர்.! 2.5 லட்சம் அபராதம்!!

ஹோம் டூர் வீடியோவால் சிக்கலில் மாட்டிய ரோபோ சங்கர்.! 2.5 லட்சம் அபராதம்!!


roboshankar-25lakhs-penality-for-keeping-parrots

வீட்டில் அனுமதி இன்றி கிளிகளை வளர்த்ததாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறையால் ரூ 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக தற்போது கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பிரபலமடைந்ததை தொடர்ந்து சினிமாவிலும் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இவரது மனைவி பிரியங்கா. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் இந்திரஜா பிகில், விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் அண்மையில் தனது ஹோம் டூர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.  இதன் மூலம் அவர்களது வீட்டில் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் வளர்ப்பது குறித்து  வனத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Parrot

அதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டுக்கு சென்று, 
இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்க கூடாது என ரோபோ சங்கர் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 
உரிய அனுமதியின்றி வெளிநாட்டு வகை கிளிகளை வளர்த்ததால் நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.