பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
"ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் கமலை சந்தித்த ரோபோ ஷங்கர்!" என்ன காரணம் தெரியுமா?

விஜய் டிவியின் "கலக்கப்போவது யாரு?" நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் ரோபோ ஷங்கர். இவர் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
2007ம் ஆண்டு வெளியான "தீபாவளி" படத்தில் உள்ளூர் கிராமவாசியாக அதிகம் அறியப்படாத ஒரு கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் காமெடியனாக இவரின் நடிப்பு அனைவரையும் கவனிக்க வைத்தது.
இதையடுத்து பல படங்களில் நடித்துள்ள ரோபோ ஷங்கர், சமீபத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். மிகவும் உடல் இளைத்து காணப்பட்ட அவருக்கு அதீத மதுப்பழக்கம் இருந்ததே உடல்நலக் குறைவுக்கு என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது ரஜினி மற்றும் கமல் இருவரையும் தனது மனைவியுடன் நேரில் சென்று சந்தித்து ஆசி வாங்கியுள்ளார் ரோபோ ஷங்கர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று ரோபோ ஷங்கருக்கு 22வது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.