இந்தியா சினிமா

அதிர்ச்சி! கழிவறை தண்ணீரில் தயாராகும் இட்லி, சட்னி! எந்த கடை? வெளியான அதிர்ச்சி வீடியோ!

Summary:

Road side food vendor used toilet water for making idly

சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் வசிக்கும் பெரும்பாலான நடுத்தர மக்கள், இளைஞர்கள் பெரும்பாலும் ரோட்டு கடைகளில்தான் அதிகம் சாப்பிடுகின்றனர். தரம் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை விலை குறைவாக கிடைக்கின்றதே என எண்ணி இதுபோன்ற கடைகளில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பல்வேறு வியாதிகளில் அல்லல் படும் செய்திகளை நாம் கேள்வி பட்டிருப்போம்.

இந்நிலையில் தெருவில் ரோட்டு கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் அருகில் இருக்கும் ரயில் நிலையத்தின் கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரை இட்லி செய்வதற்கும், சட்னி வைப்பதற்கும் பயன்படுத்தும் வீடியோ காட்சி ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.

சுமார் 45 நிமிடம் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் அந்த நபர் டாய்லெட் தண்ணீரை சமைப்பதற்கு பயன்படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் எந்த தேதியில் எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து உணவு மற்றும் மருந்துகள் அமைப்பகத்தின் மும்பை கிளையின் ஆய்வாளர் பேசியபோது இந்த வீடியோ காட்சிகள் எங்கள் பார்வைக்கு வந்த போது இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோம், இந்தமாதிரி குறு வணிகர்கள் இந்த மாதிரி தண்ணீரை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படலாம் இவ்வாறு முறைகேடாக செயல்படும் கடைகளில் உரிமத்தை ரத்து செய்வதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Advertisement