சினிமா

போட்டோஷூட்டின் போது குளத்தில் தவறி விழுந்த இறுதிசுற்று நாயகி! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதா

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிஜ வாழ்க்கையிலும் குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கை இந்த படம்  பெருமளவில் பிரபலமடைய செய்தது.

அந்த படத்தை தொடர்ந்து  அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. பின்னர் நடிகை ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார்.  மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

 இந்தநிலையில் அவர் தற்போது சேலையில், ஈர உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். இதற்கிடையில் ரித்திகா சிங் குளத்தின் அருகே இருந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி குளத்தின் உள்ளே விழுந்துள்ளார். அந்த வீடியோவை அவர் காமெடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement--!>