13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
எனக்கு குழந்தை பிறந்துருச்சு! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரியோ! என்ன குழந்தை தெரியுமா?
பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த ஸ்ருதிக்கு சமீபத்தில் வளைகாப்பும் நடைபெற்றது. இவ்வாறு ரொமான்டிக்காக வாழ்ந்து வந்த காதல் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை ரியோ மிகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.