"நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா?"

"நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா?"



Regina Cassandra assets value

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரெஜினா கசாந்த்ரா. 2005 ஆண்டு "கண்ட நாள் முதல்" என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் அவர் நடித்தார், 2010 ஆம் ஆண்டு "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் நடித்தார்.

regina

தொடர்ந்து நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, 1945, கருங்காப்பியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல குறும்படங்களில் நடித்து வரும் ரெஜினா, இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் ரெஜினாவும் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

regina

ஒரு படத்திற்கு 80லட்சம் வரை சம்பளமாக வாங்கும் ரெஜினாவுக்கு ரெஞ்ச் ரோவர், எவோக், மெர்சிடெஸ் போன்ற சொகுசு கார்கள் உள்ளன. இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 6கோடி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.