டீசரே இவ்வளவு சாதனையா! படம் வெளியானா என்ன ஆகும்! சர்க்கார் டீசர் சாதனையின் புள்ளிவிவரம்

டீசரே இவ்வளவு சாதனையா! படம் வெளியானா என்ன ஆகும்! சர்க்கார் டீசர் சாதனையின் புள்ளிவிவரம்


records-of-sarkar-teaser

நேற்று மாலை 6 மணிக்கு வெளியான விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தின் டீசர் முதல் பத்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது.

24 மணி நேரத்திற்குள் 14 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது சர்க்கார் டீசர். 

records of sarkar teaser

டீசர் வெளியான பத்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது. இந்த வேகம் இன்னும் அதிகமாகி, இருபது நிமிடத்தில் இரண்டு மில்லியன், முப்பத்தைந்து நிமிடத்தில் மூன்று மில்லியன் எனச் சென்று ஒன்றேகால் மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.1.50 மணி நேரத்தில் ஆறு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற டீசர் ஐந்தரை மணி நேரத்தில் பத்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.

மேலும், சர்கார் பட டீசர் வெளியாகி 30 நொடிகளில் ஐந்தாயிரம் லைக்குகளைப் பெற்றது. வெளியான 45 நிமிட நேரத்தில் ஐந்து லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் லைக்குகளைப் பெற்றது.வெளியான 2 மணி நேரத்தில் எட்டு லட்சத்து அறுபத்து ஓராயிரம் லைக்குகளையும், ஐந்து மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

எங்கே சாதனையை புரிய வைத்தார் விஜய் ரசிகர்களுக்கு சர்க்கார் படக்குழுவின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.