தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இந்த காரணத்தினால் தான் சல்மான் கானை பிரிந்தாரா ஐஸ்வர்யா ராய்.? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் உலக அழகியாக கொண்டாடப்பட்டு வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார்.
இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தைகளும் இருந்து வருகின்றனர். இது போன்ற நிலையில், இவர் திருமணத்திற்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்து வந்தால் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
இந்நிலையில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் இருவக்கும் பிரேக்கப் ஆனதை குறித்து தற்போது செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அதாவது சல்மான்கான் பற்றி பலர் தவறாக ஐஸ்வர்யா ராயிடம் கூறியதால் அவர் சல்மான்கானை விட்டு விலகி விட்டாராம். மேலும் இதற்கு காரணம் கேட்டு சல்மான் கான் ஐஸ்வர்யா ராயின் வீட்டின் கதவை நள்ளிரவில் சென்று வேகமாக தட்டி உள்ளார். அவர் கதவை திறக்காததனால் திட்டி விட்டு சென்றுள்ளாராம். மேலும் அவர் செல்லும் போது கையில் ரத்த காயமாக இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.