ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலிருந்து தூக்கப்பட்ட வாரிசு நடிகர்! இதுதான் காரணமா?? வெளிவந்த தகவல்!!Reason for adharva rejected from laal salam movie

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் லால் சலாம். இதற்கு முன்பு ஐஸ்வர்யா 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாம்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் ரஜினி ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Adharva

லால் சலாம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க ஐஸ்வர்யா மறைந்த முன்னணி நடிகர் முரளியின் மகனும், வளர்ந்து வரும் நடிகருமான அதர்வாவைதான் தேர்வு செய்தாராம். ஆனால் அவர் அதிகம் சம்பளம் கேட்டதால் இந்தப் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டு, விஷ்ணு விஷாலை கமிட் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.