பிரமாண்டமாக நடைபெற்ற ஆர்சி 16 படத்தின் பூஜை.! அட.. யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா.! வைரல் புகைப்படங்கள்!!rc16-movie-pooja-function-photos-viral

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகர் ராம்சரண் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார். இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை
  ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

RC16

இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. அதில் ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ஏ.ஆர் ரஹ்மான், ராம் சரண்ணின் மனைவி உபாசனா, தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

RC16