100 ரூபாய்... பின்புறம் என்.டி.ஆர் புகைப்படம்.! ஆர் பி ஐ யின் அப்டேட்!rbi-release-ntr-face-coin-to-celebrate-his-birth-centen

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகருமான என் டி ஆர் என அழைக்கப்படும்  என்டி ராமராவ். ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இவர் 1949 ஆம் ஆண்டு வெளியான மனதேசம் என்ற திரைப்படத்தின் மூலம்  நடிகராக  திரை உலகிற்கு  அறிமுகமானார்.

1950 களில் இதிகாச மற்றும் புராணக் கதைகளில்  கிருஷ்ணர் ராமர் போன்ற கடவுள் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தெலுங்கு சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர். மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றவர்  நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும்  சினிமா இயக்குனராகவும் இருந்தவர்.

N T R

ராஜூ பேடா மற்றும் லவகுசா போன்ற திரைப்படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றவை. தெலுங்கு சினிமா ரசிகர்கள் இவரை ஒரு நடிகராக பார்க்காமல் கடவுளாகவே பார்த்தனர். 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் பார்ட்டி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். மேலும் 1984 ஆம் ஆண்டு  தமிழக சட்டசபை தேர்தலின் போது  தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர்க்கு ஆதரவாக  தமிழகத்தில் பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ள இவர்  மொத்தம் ஏழு வருடங்கள்  முதல்வர் பதவி வகித்திருக்கிறார்.

N T R

 கலைத்துறை மற்றும் அரசியலுக்கு பெரும் தொண்டாற்றிய என் டி ஆரின் நூற்றாண்டு விழாவை  கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது ஆந்திர மாநிலம். இந்நிலையில் அவரது  கலை மற்றும் அரசியலுக்கான பங்களிப்பை போற்றும் வகையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அவரது  உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு  கௌரவிக்க உள்ளது.

இது தொடர்பாக ஆர்பிஐ நிர்வாகிகள்  என் டி ஆரின் மகள் புரந்தேஸ்வரியைச்  சந்தித்து இந்த நாணயத்திற்க்கான மாதிரியை அளித்துள்ளனர். என் டி ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவருக்கு அளிக்க உள்ள இந்த  மிகப்பெரிய கௌரவத்திற்கு  ஆந்திர மாநில மக்கள் மற்றும்  தெலுங்கு தேசம் கட்சியினர்  மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.