ப்பா.. என்னா ரொமான்ஸ்.! ட்ரெண்டிங் ஜோடி மகா- ரவீந்தர் காதல் பொங்க வெளியிட்ட புகைப்படம்!!

ப்பா.. என்னா ரொமான்ஸ்.! ட்ரெண்டிங் ஜோடி மகா- ரவீந்தர் காதல் பொங்க வெளியிட்ட புகைப்படம்!!


raveendar-mahalakshmi-kissing-photo-viral

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை துவங்கி பின் பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் பல ரோல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் கடந்த மாதம் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இருவரும் இணையத்தில் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வருகின்றனர். மேலும் மகாலட்சுமி, ரவீந்தர் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்த நிலையில் ரவீந்தர் சில தினங்களுக்கு முன்பு தங்களது முதல் மாத திருமண நாளை கொண்டாடினர். இந்த நிலையில் மகாலட்சுமி தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.