ராட்சசன் மிரட்டல் வில்லன் இவர் தானா? வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.!

ராட்சசன் மிரட்டல் வில்லன் இவர் தானா? வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.!


ratsasan-tamil-movie-villan-saravanan

ராட்சசன் படத்தில் சைக்கோ வில்லனாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரை படக்குழுவினர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல்ரீதியாக வெற்றி பெற்ற படம் ராட்சசன். இந்த படத்தில் பணிபுரிந்த வெளிநாட்டு கலைஞர் ஒருவர் இப்படத்தை ஹாலிவுட்டில் எடுக்கப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

tamilspark

இந்தப் படத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக இருந்தது இப்படத்தின் வில்லன் கிறிஸ்டோபர் கேரக்டர். வெள்ளைக்கார தோற்றத்தில் சைக்கோ வில்லனாக பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்யும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவின்போது படக்குழுவினர் அவரை அறிமுகம் செய்தனர். திருச்சியை சேர்ந்த சரவணன் என்ற அவர் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

tamilspark

நிகழ்ச்சியில் பேசிய அவர் இயக்குனர் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்தார் மேலும் இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

அடுத்ததாக அவர், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘நான்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர், சரவணனை பார்த்து இவர் வில்லனாக நடிக்க வேண்டியவர் இல்லை, ஹீரோ போல இருக்கிறார் என பாராட்டிச் சென்றனர்.