நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!
சொந்த பட பிரமோஷனுக்கு கோடிகளை வாங்கும் கேடி நடிகைன்னு நினைச்சிட்டிங்களா? ராஷ்மிகாடா..! அசத்தும் நடிகை..!!
சொந்த பட பிரமோஷனுக்கு கோடிகளை வாங்கும் கேடி நடிகைன்னு நினைச்சிட்டிங்களா? ராஷ்மிகாடா..! அசத்தும் நடிகை..!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இவர் "கீதா கோவிந்தம்" படத்திற்கு பின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்தில் இவரை கண்டு தனிரசிகர் பட்டாளமே உருவானது. தமிழில் நடிகை ராஷ்மிகா மந்தனா "சுல்தான்" திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பின், ஐந்து மொழிகளில் உருவான "புஷ்பா" திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் புகழாரம் சூடியது. புஷ்பா திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ராஷ்மிகா நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் தயாராக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இதில் வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்ற ஒரிஜினல் பான் இந்தியா நடிகையாக மாறிவரும் ராஷ்மிகாவுக்கு எப்படி தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கிறது என்ற கேள்வி இருந்துவந்தது. ஆனால் இதற்கு சினிமா வட்டாரங்கள் பல காரணங்களையும் கூறி வருகிறது. அவர்கள் கூறுவதாவைத்து, 'தனக்கு தேவை பெரிய பெரிய பட வாய்ப்புகள். இதனால் ராஷ்மிகா சம்பள விஷயத்தில் இதுதான் எனக்கு தேவை என்று கூற மாட்டார். அதுபோல நாம் நடித்து விட்டால் நமது படம் என்று விளம்பரப்படுத்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார்' என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகர்களுடன் நடித்து வந்த ராஷ்மிகா அடுத்து தளபதி விஜய் படமான வாரிசு-வில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து சினிமா வட்டாரம், மற்ற பெரிய நடிகைகள் போல பிரமோஷனுக்கு வரமாட்டேன், இத்தனை கோடி வேண்டும் என்று பணம் கேட்காமல், தனது வாய்ப்பை சரியாக ரஷ்மிகா பயன்படுத்துகிறார் என்றும், மற்ற நடிகைகள் இதனால் மட்டுமே வாய்ப்புகளை தவறவிடுகின்றனர் என்றும் கூறுகிறது