சூப்பர்.. பிசினஸ் வுமனாக அவதாரமெடுத்த ராஷ்மிகா.! என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

சூப்பர்.. பிசினஸ் வுமனாக அவதாரமெடுத்த ராஷ்மிகா.! என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!rashmika-mandanna-invest-money-in-new-business

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வரத்துவங்கியவர் நடிகை ராஷ்மிகா. மேலும் அந்த படத்தில் இடம் பெற்ற 'இன்கேம் இன்கேம்' பாடல் பெரியளவில் ஹிட்டாகி ராஷ்மிகாவை  புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து,கன்னடம்,தெலுங்கு என கொடிகட்டிப்பறந்த நேஷனல் கிரஷ் நாயகி ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படமான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் களமிறங்கி மிஷன், குட்பை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

rashmika mandanna

முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டல்கள், அழகு சாதன நிலையங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் ராஷ்மிகாவும் இணைந்துள்ளார். அவர் தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அழகு சாதன நிறுவனத்தின் மீது முதலீடு செய்து வருகிறாராம். மேலும் ராஷ்மிகா அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.