கோலாகலமாக நடந்த ராணா- மிஹீகா திருமணம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

கோலாகலமாக நடந்த ராணா- மிஹீகா திருமணம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!


rana-marriage-photo-viral-3Z3JK9

பிரமாண்டமான பாகுபலி திரைப்படத்தில் வில்லன் பல்வாள்தேவனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராணா டகுபதி. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ராணா ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சமீபத்தில்  இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையாக நேற்று ராணா தனது காதலியான மிஹீகாவை கரம்பிடித்தார்.

marriage

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 30 பேர் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமண விழாவில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

marriagemarriage