பாகுபலி படத்தில் கம்பீரமாக நடித்த ராணாவா இது! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.

Rana latest photo


rana-latest-photo

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் நடிப்பில் வெளியான "ஆரம்பம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராணா டகுபதி. அதைத்தொடர்ந்து பாகுபலி, பாகுபலி2 படத்தில் நடித்துள்ளார் ராணா டகுபதி. பாகுபலி படம் ராணாவுக்கு மிக பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் அப்படம் உலக அளவில் அவரை பிரபலமடைய செய்தது. மேலும் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமடைந்து வருகிறார். தற்போது கூட அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசுக்கு காத்திருக்கிறது.

rana

இந்நிலையில் தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காரணம் பாகுபலி படத்தில் மிகவும் கம்பீரமாக இருந்த ராணா தற்போது இப்படி மோசமாக இருப்பது தான். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் ராணா இது, இப்படி மாறிட்டரே என ஷாக்காகி வருகின்றனர்.