ஆஹான்.. வாட்ஸ்அப் நம்பர் கேட்டவரை நோஸ்கட் செய்த ரம்யா பாண்டியன்.. இதான் நம்பர்., முடிஞ்சா கெஸ் பண்ணிக்கோ..!! 

ஆஹான்.. வாட்ஸ்அப் நம்பர் கேட்டவரை நோஸ்கட் செய்த ரம்யா பாண்டியன்.. இதான் நம்பர்., முடிஞ்சா கெஸ் பண்ணிக்கோ..!! 


Ramya Pandian nosecut her fan question

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் விரும்பப்பட்டு பார்க்கப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்திருப்பார். 

Actress Ramya Pandian

இதனை தொடர்ந்து பிக்பாஸில் களமிறங்கிய ரம்யா பாண்டியன், அனைவரது மத்தியிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

Actress Ramya Pandian

அத்துடன் ரசிகர்களுடனும் அடிக்கடி உரையாடி வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களிடம் உரையாடியபோது, ரசிகர் ஒருவர் 'உங்க வாட்ஸப் நம்பர் வேணும்' என்று கேட்கவே, அதற்கு ரம்யா பாண்டியனும் பதிலளித்துள்ளார். "10 நம்பர் இருக்கு 0123456789 காம்பினேஷன் தான், கெஸ் பண்ணிக்கோங்க" என்று நோஸ் கட் கொடுத்துள்ளார்.