பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் ரியோவின் அடுத்த படம்! ஹீரோயின் யார் தெரியுமா?

பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் ரியோவின் அடுத்த படம்! ஹீரோயின் யார் தெரியுமா?


ramya-nambeesan-casting-with-riyo-in-next-movie

சன் ம்யூசிக் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ரியோ. அதன்பின்னர் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர்மூலம் நடிகராக அவதாரம் எடுத்த இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

முதல் படத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற ரியோ அடுத்ததாக செம்ம போத ஆகாதே, பாணா காத்தாடி ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க உள்ளாராம்.

Riyo

யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ரியோவுக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த வேட்டையன் கவினுடன் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Riyo