சினிமா

விஜய்டிவியின் பிரபல சீரியல் நடிகருடன் பாடகி ரம்யாவிற்கு திருமணமா.! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!!

Summary:

ramya going to marry neelakuyil serial actor sathya

சினிமாவில் பழம் பெரும் நடிகராக இருந்த என்எஸ் கலைவாணரின் பேத்தி பாடகி ரம்யா. சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்ட இவர் தனது சிறு வயது முதலே கர்னாடிக் முறைபடி பாடல் கற்று வந்தார். மேலும் கர்னாடிக் முதல் குத்து பாடல் வரை அவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் ஏராளமான பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

இவ்வாறு பாடகியாக முன்னணியில் இருந்த அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் சிறப்பான விளையாட்டாலும், தனது குணத்தாலும் அவர் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்தார்.

இந்நிலையில் ரம்யாவிற்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நீலக்குயில் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் சத்யாவிற்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்ற ஜனனி ஐயர், மும்தாஜ் ரம்யா மற்றும் சத்யா ஜோடியின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


Advertisement