ராம்சரண்- சங்கர் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டம்.. விபூதியடிக்கப்பார்த்த கொள்ளை கும்பல்., படக்குழு பரபரப்பு அறிவிப்பு..!  

ராம்சரண்- சங்கர் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டம்.. விபூதியடிக்கப்பார்த்த கொள்ளை கும்பல்., படக்குழு பரபரப்பு அறிவிப்பு..!  


ramcharan movie update

இளையதளபதி விஜயின் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "வாரிசு". இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதுபோலவே, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் நடிகர்  ராம்சரணின் ஆர்சி15 படத்தையும் தயாரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆர்சி 15 க்காக நடிக்க தெரிந்த நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின. 

இதனை கண்ட ரசிகர்கள் ஆடிஷன் எங்கு நடைபெறுகிறது?, எத்தனை வயது உடையவர்கள் கலந்து கொள்ளலாம்? என்று கேள்வி எழுப்பவே, படைக்குழு சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆர்சி15 படத்தில் புதிய நடிகர்கள் நடிப்பது தொடர்பான ஆடிஷன் எதுவும் நடத்தப்படவில்லை. இயக்குனர் அல்லது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்படாத விஷயங்களை நம்பி ஏமாறவேண்டாம். கவனமுடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.