பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் திரைப்படம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!Ramanayam movie update on April 19

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக இராமாயணா திரைப்படம் உருவாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டது.

yash

இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், ராவணன் கதாபாத்திரத்தில் கேஜிஎப் புகழ் யஷ் மற்றும் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது 

இந்த திரைப்படத்தை நித்திஷ் திவாரி என்பவர் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உலக தரத்தில் உருவாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

yash

இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ராமநவமியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் அனைவரும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.