"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
பாக்கிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்த பிரபல சர்ச்சை நடிகை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்பொழுது பாக்கிஸ்தான் கொடியுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
சென்ற வருடம் #MeToo விவகாரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் தனது காதலர் தீபக் கலாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிர்வாண கோலத்தில் திருமணம் செய்துகொள்ள போவதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.
அதன் பிறகு நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ராக்கி சாவந்த் தற்பொழுது இந்திய ரசிகர்களை வெறுப்பேற்று வகையில் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் ராக்கி சாவந்த் பாக்கிஸ்தான் கொடியினை கையில் பிடித்தவாறும், மார்பில் விரித்தவாறும் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பதிவிட்ட அவர், "நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இது நான் நடிக்கும் தாரா 370 படத்தின் ஒரு கதாப்பாத்திரம்" என பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற ரசிகர்கள் ராக்கி சவாந்தை மிகவும் மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். அவர் அதைப் போன்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் தவறில்லை. அது அவருடைய தொழில். ஆனால், குறிப்பாக அந்த புகைப்படங்களை ஏன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதினை புண்படுத்த வேண்டும் என்பது தான் பலரின் கேள்வியாக இருந்துள்ளது.