அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
40 வயது கவர்ச்சி நடிகைக்கு அமெரிக்காவில் திருமணம்! அனைவருக்கும் அழைப்பு விடுத்த கவர்ச்சிப் புயல்
பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்பொழுது தனது திருமண அழைப்பிதழை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் ராக்கி.
சில நாட்களுக்கு முன்பு #MeToo விவகாரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார்.

மேலும் குத்து சண்டை வீராங்கனை ஒருவருடன் போட்டிபோட்டு முதுகு எலும்பை உடைத்து கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார். அந்த சமயத்தில் கூட கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் ராக்கி.
இவர் தமிழில் சகியே, முத்திரை படங்களில் கவர்ச்சி பாடலுக்கு ஆடியுள்ளார். மேலும் அவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். 40 வயதான ராக்கி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் கலால் (45) என்பவரை வரும் டிசம்பர் 30 ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதற்கான அழைப்பிதழை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் ராக்கி.