தளபதி விஜய்யின் அந்த சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ராஜு! அதுவும் எந்த பேமஸான கேரக்டர்னு பார்த்தீங்களா!!

தளபதி விஜய்யின் அந்த சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ராஜு! அதுவும் எந்த பேமஸான கேரக்டர்னு பார்த்தீங்களா!!


raju-miss-nanban-movie-chance

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5ல் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் பாவனி, ராஜு பிரியங்கா, அமீர், நிரூப் ஆகியோர் மட்டும் இறுதிப்போட்டிக்கு தகுதியானர். அவர்களில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று, 50 லட்சம் பரிசுத் தொகையை தட்டிச் சென்றார்.

ராஜு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்ற பல  சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்து வந்துள்ளார். ராஜு தளபதி விஜய்யின் தீவிர வெறியன் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நண்பன் படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது அந்த படத்தில் மில்லிமீட்டர் கதாபாத்திரத்தில் இருந்து சென்டிமீட்டர் ஆக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதற்காக ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆகியுள்ளார். இந்நிலையில் படத்தில் நடிக்க தயாராக இருந்த நிலையில் படக்குழுவில் ஒருவர், மில்லி மீட்டர் சென்டி மீட்டராகும்போது ஆளுதான் வளர்ந்திருக்க வேண்டும். கண்ணுமா வளரும் என்று கூறினாராம். பின்னர் தன்னை அழைத்து கண்ணுதான் மைனஸ் பாயிண்ட். அந்த கேரக்டரில் நீங்க நடிக்க முடியாது என கூறினார்களாம். இதனை ராஜூ கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.