சினிமா

எஸ்பிபி-யின் தற்போதைய உடல்நிலை என்ன? நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ!

Summary:

rajinikanth talk about SPB

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் எஸ்பிபி அவர்களின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி பரவியது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

அதனைத்தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது. மயக்கத்திலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், "50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ வைத்த மதிப்பிற்குரிய எஸ்.பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விபட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி அவர்கள் சீக்கீரம் குணம் அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Advertisement