பிரதமரின் கோரிக்கையை ஏற்று, சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த சிறப்பான காரியம்.! வைரலாகும் புகைப்படம்!!

பிரதமரின் கோரிக்கையை ஏற்று, சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த சிறப்பான காரியம்.! வைரலாகும் புகைப்படம்!!rajinikanth-hoisted-national-flag-in-his-house

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவுள்ளது. ஒரு சில தினங்களில் நாடு முழுவதும் சுதந்திர தினம் மிக விமரிசையாக கொண்டாடபடவுள்ளது. மேலும் அதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சுதந்திரம் பெறுவதற்காக போராடிய தலைவர்களை போற்றும் வகையில் பிரதமர் மோடி, அனைவரையும் ஆகஸ்ட் 13 முதல் 15 தேதி வரை வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்ய வலியுறுத்தினார். மேலும் அனைவரும் தங்களது சமூக வலைதளங்களில் தேசியக்கொடியை டிபியாக வைக்க அறிவுறுத்தியுள்ளார்.

rajini

அதனை ஏற்ற பல பிரபலங்களும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் தேசியக் கொடியை ப்ரொஃபைலாக வைத்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிபியாக தேசிய கொடியை பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து அவர் தற்போது, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.