சினிமா

தனது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு வந்தவர்களுக்கு, வித்தியாசமான பரிசளித்து அசத்திய ரஜினி! என்ன பரிசு தெரியுமா?

Summary:

rajinikanth gift seeds ball for daughter sowndarya encagement

தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக புகழ்பெற்றவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த, இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கியுள்ளார்மேலும் இவர் 2010ல் தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

soundarya rajinikanth recption photos, சௌந்தர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில்  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து மகன் வேத் உடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

soundarya rajinikanth recption photos, சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று  சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள்  மட்டும் பங்கேற்றனர். 

தனுஷ்

மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் பரிசாக வழங்கப்பட்டன.

 

அன்பளிப்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வரவேற்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement