சினிமா

எல்லாத்துக்கும் அவர்கள்தான் காரணம்! படம் வெளியான நிலையில் ரஜினி பேட்டி! வீடியோ!

Summary:

Rajini speech about petta movie

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. காலா, கபாலி என இரண்டு படங்களும் ரஜினி ரசிகர்கள் எதிர் பார்த்த அளவிற்கு மாஸாக அமையாததால் பேட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

விஜய் சேதுபதி, சசி குமார், த்ரிஷா, சிம்ரன் என தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் பேட்ட திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பேட்ட திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பழைய ரஜினியை அவரது ரசிகர்கள் பார்த்தாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் பாகம் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாகம் சற்று சொதப்பலாகவே செல்கிறது.

இந்நிலையில் பேட்ட திரைப்படம் குறித்து ரஜினி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசுகையில் படத்தின் வெற்றிக்கு முழு காரணம் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் என கூறியுள்ளார்.

பழைய ரஜினியை பார்த்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர் என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூறிய ரஜினி ஒவொரு காட்சியிலும் என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தியே கார்த்திக் சுப்புராஜ் நடிக்க வைத்துவிட்டார் என்று சிரித்துக்கொண்டே ரஜினி பதில் கூறினார். இதோ அந்த வீடியோ. 


Advertisement