புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் புதிய படம்.! ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ்.! வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை திருமணம் செய்து 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து இருவரும் அவரவர் பணிகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளாராம். மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் அப்பாவும், சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.