அடேங்கப்பா என்னவொரு ஆட்டம்! மகளின் திருமண கொண்டாட்டதில் ரஜினி என்ன செய்தார் தெரியுமா?

rajini dance in sowndraya reception


rajini dance in sowndraya reception

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சமீபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

rajini

அதில் பலரும் கலந்துக்கொண்டு ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர், அப்போது ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் போடப்பட்ட நிலையில், எல்லோரும் ரஜினியை நடனமாடஅழைக்க, அவரும் எழுந்து நடனமாடியுள்ளார்,மேலும் இதனை கண்ட  அங்கிருந்தவர்கள் அனைவரும் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.