சினிமா

40 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் நடிக்கும் ரஜினி - கமல்!! சூப்பர் தகவல்!!

Summary:

Rajini and kamal joining together in next film

தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்கள் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் காமலும்தான். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 9 தமிழ் படங்களில் ஒன்றாக நடித்துள்னனர். ரஜினியின் சினிமா பயணம் ஆரம்பம் ஆனதே கமல் நடித்த 16 வயதினிலே படத்தில் இருந்துதான்.

அன்றில் இருந்து இன்றுவரை நண்பர்களாக இருக்கும் இவர்கள் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சுமார் 40 வருடங்களாக ஒன்றாக இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இருவரும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில் கூட எங்கள் நட்பை யாராலும் பிரிக்க முடியாது என ரஜினி பேசியிருந்தார்.

இதனை அடுத்து ரஜினி - கமல் இருவரும் அரசியலில் ஒன்றாக இணைய போவதாக செய்திகள் வெளியானது. தற்போது ரஜினியும் - கமல் அவர்களும் 40 வருடம் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகிறது.

தற்போது ரஜினி தர்பார் படத்திலும், கமல் இந்தியன் 2 படத்திலும் பிசியாக நடித்துவருகின்றனர். தர்பார் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை அடுத்து சிவா படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், கமலின் ராஜ் கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தில்தான் கமல் கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 40 வருடங்களுக்கு பிறகு ரஜினியும் - கமலும் ஒரே திரையில் தோன்ற இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement