அட அட.. ராஜாராணி 2 சித்துவுக்கு அடித்த ஜாக்பாட்! இனி சீரியலில் நடிப்பாரா?? வாழ்த்தும் ரசிகர்கள்!!

அட அட.. ராஜாராணி 2 சித்துவுக்கு அடித்த ஜாக்பாட்! இனி சீரியலில் நடிப்பாரா?? வாழ்த்தும் ரசிகர்கள்!!


Rajarani 2 sithu got movie chance

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சித்து. அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த ராஜாராணி தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து  அவர், வல்லினம், குற்றம் கடிதல், பீச்சாங்கை. ஒத்தைக்கு ஒத்தை, மதுரை வீரன் உள்ளிட்ட சில படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

rajarani 2

 பின்னர் அவர் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலேயே சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவருக்கு தற்போது புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.