உங்களை விட ஏழு வயது குறைவான நபருடன் டேட்டிங் செய்வீர்களா! நடிகை ரைசா கூறிய பதிலை பாருங்கள்!

உங்களை விட ஏழு வயது குறைவான நபருடன் டேட்டிங் செய்வீர்களா! நடிகை ரைசா கூறிய பதிலை பாருங்கள்!


Raiza

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மாடலான இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.  

அதன்பின்னர் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரைசா  தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய இருபடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Raiza

இந்நிலையில் தற்போது ரைசாவிடம் ரசிகர் ஒருவர் வித்தியாசமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது உங்களை விட 7 வயது குறைவான நபருடன் டேட்டிங் செய்வீர்களா? என்று கேட்டுள்ளார். 

அதற்கு ரைசா ஏன் நீங்கள் என்னை விட 7 வயது சிறியவரா! என்று கேட்டு விட்டு டேட்டிங் செய்ய வயது ஒரு தடையில்லை யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார் என்று ஓபனாக கூறியுள்ளார்.