மாலத்தீவில் செம மஜாதான்.! பிகினி உடையில் ஹாயாக சுற்றும் ரகுல் ப்ரீத் சிங்.! ஹாட் புகைப்படங்கள்..

மாலத்தீவில் செம மஜாதான்.! பிகினி உடையில் ஹாயாக சுற்றும் ரகுல் ப்ரீத் சிங்.! ஹாட் புகைப்படங்கள்..


ragul-preeth-singh-maldives-images-viral

19 வயதில் தனது சினிமா வாழ்க்கையை துவங்கியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அவர் தமிழில்  தடையற தாக்க என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் புத்தகம், கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் ரகுல் பிரீத் சிங்கை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்யவில்லை. இந்த நிலையில் அவர் தெலுங்கில் பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின்னர் ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அவர் தேவ், நடிகர் சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 போன்ற படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பிகினி உடையில் குதூகலமாக என்ஜாய் செய்து ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.